ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய வரி சீர்திருத்தங்கள்:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நடுத்தர வர்க்கத்தினருக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஜிஎஸ்டி வரி விதிப்பை 5% மற்றும் 18% என ஈரடுக்காக மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், புகையிலை பொருட்கள் மற்றும் சொகுசு கார்கள் தொடர்பான பொருட்களுக்கு 40% வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஜிஎஸ்டி வரி குறைப்பு வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி செமிகான் இந்தியா 2025 கண்காட்சியை பார்வையிட்டார்:
டெல்லியில் நடைபெறும் செமிகான் இந்தியா 2025 மாநாட்டின் இரண்டாவது நாள் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.
NIRF 2025 தரவரிசைப் பட்டியல் வெளியீடு:
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் புது தில்லியில் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) 2025 ஐ வெளியிட்டார். இந்த தரவரிசைப் பட்டியலின்படி, IIM அகமதாபாத் இந்தியாவின் நம்பர் 1 மேலாண்மைக் கல்லூரியாக தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. IIM பெங்களூரு இரண்டாவது இடத்தையும், IIM கோழிக்கோடு மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த ஆண்டு முதல் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே ஐ.ஐ.டி, டெல்லி ஐ.ஐ.டி ஆகும்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா:
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் 10வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவில் சட்டப்பூர்வமாகத் தங்க அனுமதி:
இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் சட்டப்பூர்வமாகத் தங்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிலாடி-நபி முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை:
செப்டம்பர் 5 ஆம் தேதி, மிலாடி-நபியை முன்னிட்டு அகமதாபாத், பெங்களூரு, சென்னை உட்பட பல மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.