போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான கடந்த 24 மணிநேரத்தின் மிக முக்கியமான உலக நடப்பு நிகழ்வுகளின் சுருக்கம் இங்கே.
நெதர்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சரின் ராஜினாமா
காஸாவில் நடக்கும் போரால் இஸ்ரேலிடம் இருந்து இறக்குமதி செய்வதை நெதர்லாந்து நிறுத்த வேண்டும் என்று நெதர்லாந்து நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மசோதாவுக்குப் போதிய ஆதரவு கிடைக்காததால், நெதர்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த மசோதா தோல்வியடைந்ததால் மனமுடைந்த அவர், தனது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவரது ஆதரவு அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். இதனால் நெதர்லாந்து நாடாளுமன்றத்தில் பெரும் வெற்றிடம் உருவாகியுள்ளது.
அமெரிக்காவில் பேருந்து விபத்து: 5 பேர் பலி
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் சென்ற பேருந்து, பஃபலோ நகரிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 54 சுற்றுலாப் பயணிகளில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 49 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
அதிவேக ஏவுகணைப் போட்டி: சீனா முன்னிலை
உலகம் முழுவதும் அதிவேக (Hypersonic) ஏவுகணைகளை உருவாக்கும் போட்டி தீவிரமடைந்து வருகிறது. தற்போது இந்தத் தொழில்நுட்பத்தில் சீனா முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து ரஷ்யா உள்ளது. அமெரிக்காவும் முன்னேறி வருகிறது, ஆனால் பிரிட்டனிடம் இந்த வகை ஏவுகணைகள் இல்லை. ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஏவுகணைகள், போர்கள் நடத்தப்படும் முறையை மாற்றக்கூடும். இஸ்ரேலிடம் ஆரோ 3 (Arrow 3) என்ற அதிவேக ஏவுகணை உள்ளது, மேலும் ஈரானும் தன்னிடம் அதிவேக ஆயுதங்கள் இருப்பதாகக் கூறியுள்ளது.
இலங்கை முன்னாள் அதிபரின் கைது
இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார்.